கடும் கோபத்தோடு நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரணில்!

download-1

நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள வீதியை மறித்து எதிர்ப்பு போராட்டங்களை நடத்தும் நபர்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் வரவு செலவு திட்ட விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

வீதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக 4 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு சிரமப்பட்டதாக இன்று என்னிடம் முறைப்பாடு செய்தார்கள்.

நாடாளுமன்ற சலுகை சட்டத்தில் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு அல்லது நாடாளுமன்றத்தில் இருந்து செல்லும் போது தடை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு வரும் போதும் வெளியேறும் போதும் எவ்வித தடையும் இன்றி செல்வது நாடாளுமன்ற வரப்பிரசாதங்களின் ஒன்றாகும்.

எனவே, இது தொடர்பில் சபாநாயகர் ஊடாக பொலிஸ் மற்றும் நீதிமன்றத்தில் அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.