அதிகார சபைக்கான தற்காலிக நியமனங்கள் விரைவில் வழங்கிவைக்கப்படும் – பா.டெனிஸ்வரன்

வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கான தற்காலிக நியமனம் வழங்கும் நிகழ்வு அண்மையில் யாழ்ப்பாணம்குருநகரில் அமைந்துள்ள மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்கள மாநாட்டு மண்டபத்தில் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வின்போது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா இரண்டுபேரும் மன்னார் மற்றும் வவுனியா ஆகியமாவட்டங்களில் இருந்து தலா ஒருவருமாக மொத்தம் 08 முகாமைத்துவஉதவியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்தோடு யாழ்ப்பாணத்திலிருந்து 14 பேரும் கிளிநொச்சியிலிருந்து 07 பேரும் மன்னார் மற்றும் வவுனியாவிலிருந்து 06 பேரும் முல்லைத்தீவில் இருந்து 02 பேருமாக மொத்தம் 35 நேரக் கணிப்பாளர்களுக்கும் மேற்படி தற்காலிக நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த அமைச்சர்

போக்குவரத்து சேவையில் காணப்படுகின்ற பல்வேறு பிரச்சினைகளை சீர்செய்வதற்கும், ஒழுங்குபடுத்துவதற்குமான அவசர தேவைக் கருதி அமைச்சரவை வாரியப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைவாக கெளரவ ஆளுநர் அவர்கள் அனுமதியின் பேரில் மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டன. அத்தோடு அதிகாரசபையை உருவாக்கியவுடன் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் பலவருடங்கள் வேலை செய்தவர்கள் எவ்வித முன்னறிவித்தலுமின்றி நிறுத்தப்பட்டுள்ளனர்.

அவ்வாறு நிறுத்தப்பட்டவர்களையும் தனியார் சங்கங்களில் பணிபுரிந்தவர்களையும் அழைத்து நேர்முகத்தேர்வுகளை நடத்தியுள்ளோம்.

இதேவேளை அவ்வாறு அழைக்கப்பட்ட நூற்றிற்கு மேற்பட்டவர்களில் இருந்து அடிப்படைக் கல்வித்தகைமைகள் உடையவர்கள் நாங்கள் தெரிவு செய்துள்ளோம்.

மேலும் மேற்படி தற்காலிக நியமனங்களை பெற்றவர்கள் அதனை வைத்து நிரந்தர நியமனங்களை கோர முடியாது. நிரந்தர ஆளணிகள் உள்வாங்கப்படும்போது அரச நடைமுறைகளுக்கு அமைவாக விண்ணப்பித்து நிரந்தர நியமனத்திற்கு தகுதியுடையவர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்படுவர்.

மேலும் எதிர்வரும் தை மாதமளவில் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் ஆளணிக்கான அனுமதி வழங்குவார்கள்.

அதன்பின்னர் உடனடியாக ஆளணி நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும், குறைந்தது 175 பேருக்கான வேலைவாய்ப்பை வழங்கமுடியுமென எதிர்ப்பார்க்கிறோம்.

வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டு ஓர் நியதிச்சட்டத்தினூடாக வேலைவாய்ப்பு வழங்கப்படுகின்றது என்றால் இதுவே முதல் தடவையாகும் என மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்விற்கு அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் அ.நிக்கோலாஸ்பிள்ளை, அமைச்சின் பிரதம கணக்காளர்அனந்தகிரிஷ்ணன், மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர்டி.சிவராஜலிங்கம்,

அதிகாரசபையின் கெளரவ உறுப்பினர்கள், இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய முகாமையாளர், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களின்தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-1 625-0-560-320-160-600-053-800-668-160-90-2 625-0-560-320-160-600-053-800-668-160-90-3 625-0-560-320-160-600-053-800-668-160-90-4 625-0-560-320-160-600-053-800-668-160-90-5 625-0-560-320-160-600-053-800-668-160-90-6 625-0-560-320-160-600-053-800-668-160-90-7 625-0-560-320-160-600-053-800-668-160-90-8 625-0-560-320-160-600-053-800-668-160-90-9 625-0-560-320-160-600-053-800-668-160-90-10 625-0-560-320-160-600-053-800-668-160-90-11 625-0-560-320-160-600-053-800-668-160-90