புரிதல் இன்றி சேவை புறக்கணிப்பில் ஈடுபடும் மருத்துவர்கள்-ராஜித சேனாரத்ன

rajitha

அப்பாவி நோயாளர்களின் பலத்தை பெற்றே அரச வைத்திய அதிகாரிகள் சேவை புறக்கணிப்புகளில் ஈடுபட்டு வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தமது கோரிக்கைகள் குறித்து எவ்வித பேச்சுவார்த்தைகளை கலந்து கொள்ளாமல் மருத்துவர்கள் சேவை புறக்கணிப்பை ஆரம்பித்தனர். இப்படியான் செயற்பாடுகளை மக்கள் எதிர்க்க வேண்டும்.

சில வரி அறவீட்டு அதிகாரிகளின் தவறான விளக்கத்தின் அடிப்படையில் சென்று, வரவு செலவுத் திட்டத்தின் வரி அறவீட்டு அறிவிப்பு சம்பந்தமாக தவறான புரிதலுடன் மருத்துவர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை போக்குவரத்து தொடர்பான 7 குற்றங்களுக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம் அறிவிக்கப்பட்டுள்ளமை சிறந்தது.

முதலில் நானே அந்த யோசனையை முன்வைத்தேன். நாட்டில் நடக்கும் வாகன விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் 25 ஆயிரம் மரணங்கள் ஏற்படுகின்றன.

இந்த விபத்துக்களில் பெரும் எண்ணிக்கையில் காயமடைகின்றனர். இவர்களுக்கு சுகாதார அமைச்சே செலவிட வேண்டியுள்ளதால், நான் இந்த யோசனையை முன்வைத்தேன்.

சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் இன்றி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் சாரதிகளால் பெருமளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

சட்டம் கொண்டு வரப்பட்டதன் பிரதிபலனாகவே சாரதி அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ள தற்போது முண்யடித்து வருகின்றனர். இதனால், அது சிறந்த திட்டம் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.