பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஹொங்கொங் விஜயம்..!

ranil-wickremesinghe-1

த எகொனமிஸ்ட் சஞ்சிகையின் ஏற்பாட்டில் நாளை தொடக்கம் ஹொங்கொங்கில் நடைபெறவுள்ள 2017ம் ஆண்டில் உலகம் ((The World in 2017) ) எனும் சர்வதேச மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த மாநாட்டில் உலகின் முக்கிய பொருளாதார மேதைகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மாநாட்டின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரது பாரியார் மைத்திரி, சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு,

பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் அதாவுத ஹெட்டி, பிரதமரின் தனிப்பட்ட உதவியாளர் சண்ட்ரா பெரேரா ஆகியோரும் ஹொங்கொங் நோக்கிப் பயணப்படவுள்ளனர்.