வவுனியாவில் கிராம சேவகர் ஒருவர் கைது

image0754

வவுனியாவில் – மூன்று முறிப்பு பிரதேசத்திற்குட்பட்ட கிராம சேவகர் ஒருவர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு கிடைக்கப்பெற்ற நிலையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.