ஊடகவியலாளராக செயற்பட்ட ஜனாதிபதி மைத்திரி!

maith1-jpg2_-jpg4_

தானும் பகுதி நேர ஊடகவியலாளராக செயற்பட்டதாக சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

”அரசியல்வாதி என்ற ரீதியில் நானும் சில காலங்கள் பொலநறுவையில் நாளிதழ் ஒன்றுக்காக பகுதிநேர ஊடகவியலாளராக பணியாற்றினேன்.

ஊடகவியலாளர்கள் பல சந்தர்ப்பங்களில் பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்த நாட்டு ஊடகதுறையில் ஊடகவியலாளர்களின் பொறுப்புக்கள் நிறைவேற்றப்படும்.

தகவல் அறியும் சட்டமூலத்தை கடந்த காலங்களில் சமர்ப்பித்துக் கொள்ள முடிந்தன. நான் உறுப்பினராக அமைச்சராக இருந்த காலப்பகுதிகளில் ஊடகவியலாளர்களை துன்புறுத்தவில்லை என்பது கொழும்பு ஊடகவியலாளர்களுக்கு தெரியும்.

அரசாங்க ஊடகவியலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.