கிண்டலுக்கு ஆளான விஜய்- விளக்கம் அளித்த பிரபலம்

625-372-560-350-160-300-053-800-666-160-90

இளைய தளபதி விஜய் நடிப்பில் பைரவா படம் பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தின் டீசர், புகைப்படம் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் வந்த விஜய் போஸ்டர் ஒன்றை பார்த்து ரசிகர்கள் கிண்டல் செய்யும் விதமாக கருத்துக்கள் கூறி வருகின்றனர்.

ஏற்கனவே சிவப்பு கலர் கோட் அணிந்தது கிண்டல் செய்யப்பட, சமீபத்தில் வந்த போஸ்டரையும் கிண்டல் செய்ய தொடங்கிவிட்டனர்.

அதற்கு காஷ்டியூம் டிசைனர் சத்யா ’சாம்பல் கலந்த சிவப்பு சட்டை ரெடிமேட் ஆக வாங்கி, அதன் முன்பகுதியை வெட்டி சாம்பல் நிறத்துணியைத் தைத்தோம். அந்த சட்டையில் பாக்கெட்டின் கீழ் நிறைய பட்டன்கள் இருக்கும். அது ஒரு புதிய முயற்சி. சாம்பல் கலந்த சிவப்பு நிறப் பேண்ட்டை தனியாக செய்தோம். சுருக்கமாக சொல்வதென்றால் மடங்கும் போது நீல நிறம் தெரியும் வகையில் உருவாக்கினோம்.

‘பைரவா’வுக்காக இந்த கடின உழைப்பை மேற்கொண்டோம். நேர்மறையோ, எதிர்மறையோ உங்கள் கருத்துகளை வெளியிடலாம். ஆனால், மொத்த காட்சிகளோடு உடையைப் பார்த்துவிட்டு உங்களுடைய கருத்துகளை தெரிவித்தால் மகிழ்வேன்’ என கூறியுள்ளார்.