மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு

15-1429101219-bhavana-cute-pic-600-jpg

நடிகை பாவனா அஜித், ஜெயம் ரவி என ஒரு சில தமிழ் படங்களில் மட்டும் நடித்தவர். தற்போது இங்கு அவருக்கு வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் மலையாளத்தில் செட்டிலாகி விட்டார்.

சமீபத்தில் நடந்த திலீப் காவ்யா திருமணத்தோடு அவரை தொடர்பு படுத்தி சில செய்திகள் வந்தன.

இதில் திலீப்பின் முன்னால் மனைவி மஞ்சு வாரியாருக்கு பாவனா பெரும் தோழி என்றும், காவ்யா விஷயத்தை போட்டு கொடுத்தது இவர் தான் என மலையாள பத்திரிகைகளில் பல செய்திகள் வந்தது.

இதை பார்த்த பாவனா உடனே அந்த சம்மந்த பட்ட பத்திரிக்கைக்கு போனில் தொடர்பு கொண்டு உடனே அந்த செய்தியை நீக்குங்கள், இல்லையெனில் வழக்கு தொடர்வேன், யார் யாரை திருமணம் செய்தால் எனக்கென்ன என கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

பாவனாவின் நடவடிக்கையால் மலையாள சினிமா மீடியா அதிர்ந்து போயுள்ளது.