விஜய் ஆண்டனியின் சைத்தானுக்கு இந்த மாதிரி ப்ரோமஷன் தேவையா – ரசிகர்களின் கேள்வி

vijayantony2_2287072a

விஜய் ஆண்டனி தமிழ் சினிமா ரசிகர்களிடம் தரமான படங்களை தேர்வு செய்து நடிக்கும் நல்ல நடிகர் என்று பெயர் உள்ளது. முந்தைய படமான பிச்சைக்காரன் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் ப்ளாக்பஸ்டர். இந்நிலையில் இவரது நடிப்பில் நாளை வெளிவரும் அடுத்த படம் சைத்தான்.

இப்படத்தை ப்ரோமோஷன் என்ற பெயரில் படத்தில் முதற் 10 நிமிடம், அடுத்த முக்கியான 5 நிமிடம் என்று காட்சிகளை வெளியீட்டு வருகின்றனர். விஜய் ஆண்டனி போன்ற பெயர் உள்ள நடிகருக்கு இந்த மாதிரியான காட்சிகளை வெளியீட்டு மக்களை திரையரங்கு கொண்டு வரவேண்டும் என்ற அவசியமே இல்லை.

இந்த ப்ரோமோஷன்களை பார்த்தால் ரசிகர்கள் மொத்தமாக படத்தை இணையத்தளத்திலே ரிலீஸ் பண்ணிடுங்க என்று கிண்டலான கமெண்ட் டை சமூகவலைத்தளத்தில் பார்க்கமுடிகிறது, மேலும் இப்படம் ஆ என்ற சுஜாதா அவர்களின் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.

நாவல் என்பதாலே ஒரு தொய்வு இருக்கும் என்ற பேச்சு நிலவுவதால் இந்த மாதிரி விஷயங்களை செய்கிறார்களா என்று தோன்றுகிறது. ரசிகர்களை பொறுத்த வரை விஜய் ஆண்டனி ஒரு நல்ல நடிகரை நம்பி தான் திரையரங்கம் படையெடுப்பார்கள் என்பது அவரின் முந்தைய படமே சாட்சி .