என்றும் இளமையாக இருக்க இந்த உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள்!

625-500-560-350-160-300-053-800-748-160-70-5

நாம் அனைவரும் எப்போதும் அழகாகவும், இளமையாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்போம்.

ஆனால் என்றும் நம்மை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு முக்கிய பங்களித்து உதவியாக இருப்பது இயற்கையான உணவுகள் மட்டும் தான்.

நம் அன்றாட உணவுப் பழக்க வழக்கத்தில், இயற்கையான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நாம் என்றென்றும் இளமையுடன் மற்றும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

எனவே நாம் எப்போதும் இளமையாக தோற்றமளிப்பதற்கு இந்த இயற்கை உணவுகளை சாப்பிட்டு வாருங்கள்.

குடை மிளகாய்

சைனீஸ் வகை உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் குடை மிளகாய், மிகவும் ஆரோக்கியம் நிறைந்த உணவாகும்.

இந்த குடை மிளகாயில், விட்டமின் A, B, C, கால்சியம், பாஸ்பரஸ் மற்று இரும்புச்சத்துகள் அதிகமாக நிறைந்துக் காணப்படுகிறது.

எனவே நாம் தினமும் குடை மிளகாயை உணவில் சேர்த்துக் கொண்டால், வளமான ஆரோக்கியம் கிடைப்பதுடன் என்றும் இளமையாக இருப்பதற்கு பயன்படுகிறது.

க்ரீன் டீ

நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பினைக் கரைத்து, உடல் எடையை குறைக்கும் தன்மை க்ரீன் டீயில் இருப்பதால், இதை பலரும் விரும்புவார்கள்.

எனவே க்ரீன் டீ குடிப்பதால், நமது உடம்பின் தோல் சுருக்கம் அடைவதை தடுத்து, நமது இளமை தோற்றத்தினை பாதுகாக்கிறது.

உலர் திராட்சை

உலர் திராட்சையில், விட்டமின் B, சுக்ரோஸ், ப்ரக்டோஸ் மற்றும் சுண்ணாம்புச் சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

எனவே இந்த உலர் திராட்சையை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், பல பிரச்சனைகளை குணப்படுத்துவதுடன், நம்மை என்று இளமையுடன் வைக்கிறது.

லெமன் ஜூஸ்

பொதுவாக எலுமிச்சையானது, அதிக மருத்துவ குணம் நிறைந்த ஒரு பழமாகும்.

எனவே நாம் தினமும் எலுமிச்சை பழத்தின் ஜூஸை குடித்து வந்தால், இதில் உள்ள சிட்ரிக் அமிலமானது, நம்முடைய சருமம் எப்போதும் பளபளப்புடன் இருக்கும்.

ஸ்ட்ராபெர்ரி

நம்முடைய வயதான தோற்றத்தை இளமையாக மாற்றும் தன்மை ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ளது.

விட்டமின் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ள இந்த பழமானது, நம்முடைய உடம்பில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த் தொற்றுக்கள் தாக்காமல் தடுக்கிறது.

வால் நட்ஸ்

நமது உடம்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில், வால்நட்ஸ் ஒரு முக்கியமான உணவாகும்.

ஆன்டி-ஆக்ஸிடன்டுகளை அதிகமாக கொண்டுள்ள இந்த வால் நட்ஸ் உணவானது, நமது உடம்பின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நம் உடம்பின் ஆரோக்கியம் மற்றும் இளமையின் சருமத்தை பாதுகாக்கிறது.

கோதுமை ரொட்டி

பஞ்சாபிகளின் முதன்மை உணவாக கருதப்படும் இந்த கோதுமை ரொட்டியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.

எனவே இந்த கோதுமை ரொட்டியை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால் நம் உடம்பில் ஏற்படும் வலிகளை போக்கி, ஆரோக்கியமான உடலமைப்பை தருகிறது.