இலங்கைக்கு எதிரான போட்டி! ஜிம்பாப்வே வீரர் மீது அதிரடி புகார்!

625-500-560-350-160-300-053-800-748-160-70-14

இலங்கைக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் பிரைன் விட்டோரி ஐசிசி விதிமுறையை மீறி பந்துவீசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் பிரைன் விட்டோரி விதியை மீறி பந்தை வீசியதாக போட்டி அதிகாரிகள் ஜிம்பாப்வே கிரிக்கெட் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர்.

இந்த அண்டு ஆரம்பத்தில் இதே பிரச்சனை காரணமாக விட்டோரி பந்து வீச தடைவிதிக்கப்பட்டது நினைவுக் கூரதக்கது.

பின்னர், விட்டோரி பந்துவீச்சு பாணியை மாற்றிக்கொண்டதை தொடர்ந்து ஐசிசி அவருக்கு மீண்டும் அனுமதியளித்தது.

தற்போது, மீண்டும் விட்டோரி மீது புகார் எழுந்துள்ளதை அடுத்து அவரது பந்துவீச்சினை ஆராய்வதுடன், குறித்த அறிக்கையை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஐசிசி அறிவித்துள்ளது.