பெண்களுடன் உல்லாசமாக இருந்த வங்கதேச வீரர்கள்: அபராதம் விதித்த கிரிக்கெட் வாரியம்

வங்கதேசத்தில் நடக்கும் பிரிமியர் லீக் தொடரின் போது ஹொட்டல் அறையில் பெண் விருந்தாளிகளுடன் உல்லாசாமக இருந்த வங்கதேச வீரர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர் போன்று வங்கதேசத்திலும் பிரிமீயர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஏனைய அணிகளை சேர்ந்த பல்வேறு நாட்டு வீரர்களும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

இதனால் அணி வீரர்கள் அனைவரும் அங்குள்ள ஹோட்டல்களில் தங்கி விளையாடி வருகின்றனர். இந்நிலையில் வங்கதேச வீரர்களான அல் அமீன்ஹொசைன், சபீர் ரஹ்மான் போன்றோர் பெண் விருந்தாளிகளை தங்களுடைய அறைகளுக்கு அழைத்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதை அறிந்த வங்கதேச கிரிக்கெட் போர்டு அவர்கள் மீது கடுமையான அபராதம் விதித்துள்ளது. வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கதேச பிரிமியர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்களான அல் அமீன் ஹொசைன், சபீர் ரஹ்மான் ஆகியோர்,

தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைகளுக்கு பெண்களை வரவழைத்துள்ளனர். வீரர்கள் அனைவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவது மிகவும் அவசியம்.

இதன் காரணமாக இருவருக்கும் 15,000 அமெரிக்க டொலர்கள், அதாவது, பரிசால் புல் அணியுடனான அல் அமீனின் ஒப்பந்தத்தின் 50 சதவீதமும், ராஜ்ஷாசி கிங்ஸ் அணியுடனான சபீர் ரஹ்மானின் 30 சதவீதம் சம்பளத்தையும் அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் இது மற்ற வீரர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என தெரிவித்துள்ளது.