சீனாவில் இருந்து நாடு திரும்பினார் மஹிந்த ராஜபக்க்ஷ

namil1

சீனாவுக்கு ஏழு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ இன்று(01) நாடு திரும்பியுள்ளார் என விமான நிலைய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

குறித்த விஜயத்தின் போது, அண்மையில் கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கட்சியின் முதல் கிளை சீனாவில் உள்ள Zem-Zem Zang பகுதியில் ஆரம்பித்து வைத்தார்.

மேலும், சீன அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பல நிகழ்வுகளில் மஹிந்த கலந்து கொண்டது மாத்திரம் இல்லாது, சீனாவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிட்டுள்ளார்.

கடந்த மாதம் 23 ஆம் திகதி சீன அரசாங்கத்தினது அழைப்பின் பெயரிலேயே மஹிந்த சீனா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.