கொழும்பு சிறையில் அரசியல் கைதி திடீர் மரணம்

prison_001

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது இந்த தகவலை வெளியிட்டார்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குணரத்ன கஜவீர உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.