பெருந்தோட்ட சமூகத்தின் சமூக அபிவிருத்திக்கான தேசிய நடவடிக்கை திட்டம்

பிரித்தானிய ஆட்சியில் மக்களை பிரித்துவிட்டு தங்களின் அதிகாரத்தினை செலுத்திக் கொண்டதை போல் அதே சிந்தனையில், அதே கட்டமைப்பில் குழம்பிப்போன கூட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என பிரிடோ நிறுவன திட்ட இயக்குனரும், மலையக சிந்தனை குழாம் உறுப்பினருமான எஸ்.கே.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட சமூகத்தின் சமூக அபிவிருத்திக்கான தேசிய நடவடிக்கை திட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் வழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலைத்திட்டம் நேற்று டிக்கோயா வனராஜா தோட்டத்தில் இயங்கும் பிரஜாசக்தி நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

625-0-560-320-160-600-053-800-668-160-90

இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டுக்காக உழைத்த மற்றும் இந்த நாட்டின் பொருளாதாரத்தினை முதுகெழும்பாக தனது உடம்பில் ஏற்றிக்கொண்டு பாரத்தினை சுமந்து கொண்டு சென்ற சமூகம் இன்று உரிமையற்று குழம்பி போன சமூகமாக இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

இன்று இந்த நாட்டில் வாழும் ஏனைய சமூகத்தினை சேர்ந்தவர்கள் காணி மற்றும் வீட்டு உரிமையுடன் வாழ்கின்றனர்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-3

இதுவரை காலமும் உரிமைக்காக எமது சமூகம் போராடியது கிடையாது எமது தலைவர்களும் இதனை முன்னெடுக்கவில்லை.

625-0-560-320-160-600-053-800-668-160-90-2

சலுகைக்காக மாத்திரமே அப்பாவியான தோட்ட தொழிலாளர்களை வீதிக்கு இறக்கினார்களே தவிர உரிமைகளை பெற்று மற்றவர்களுடன் வாழ கற்றுக்கொடுக்கவில்லை.

இதன் காரணமாக இன்றும் மற்றவர்களிடம் கை ஏந்த வேண்டிய நிலையில் நாம் வாழ்கின்றோம்.

இன்று நல்லாட்சி அரசாங்கத்தில் மலையகத்தில் பலவேறுப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தியா அரசாங்கம் பெருந்தோட்ட மக்களுக்கு தனி வீடுகளை அமைத்து கொடுக்க முன்வந்துள்ளது.

இத்திட்டத்தினை முன்னெடுக்க அமைச்சர் திகாம்பரம் அதிக அக்கறை காட்டிவருவதை எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு வேலைத்திட்டத்தில் மலையக மக்களுடைய வாழ்க்கையை மாற்றி அமைக்க கூடிய விடயங்கள் உள்ளன என அவர் தெரிவித்தார்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-1

இந்நிகழ்வில், பிரிடோ நிறுவன திட்ட இயக்குனரும் மலையக சிந்தனை குழாம் உறுப்பினருமான எஸ்.கே.சந்திரசேகரன், மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மற்றும், ஹட்டன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தாதிமார்கள் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.