மட்டக்களப்பில் அதிகரிக்கும் பாலியல் நோய்க்கு ஆளாகும் கர்ப்பிணிகள்

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் வருடாந்தம் கர்ப்பிணிப்பெண்களில் எட்டு பேரில் நான்கு பேர் பாலியல் தொடர்பான நோய்களுக்கு தொற்றுக்குள்ளாகியுள்ளது தொடர்பில் இனங்காணப்பட்டுள்ளதாக இலங்கை குடும்பநல சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.எச்.இம்தியாஸ் தெரிவித்துள்ளார்

01-71-300x218-615x447

மட்டக்களப்பு, கல்லடியில் உள்ள விமோசன்னா இல்லத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு விமோசன்னா இல்லம் இலவச வைத்தியமுகாம் மற்றும் பார்வையற்றவர்களுக்கானகண்ணாடி வழங்கும் நிகழ்வினை இன்று (01) ஏற்பாடுசெய்திருந்தது.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்

இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது.அதன்காரணமாக சிவப்புகோட்டுக்குள் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளது.

இரண்டாயிரம்பேரை தாண்டியதாக எச்ஐவியை கொண்ட நாடாக அலங்கை பதிவாகியுள்ளது. மேலும் பத்தாயிரம்பேரை சோதனை செய்யும்போது அதில் இரண்டுபேர் எச்ஐவிக்குஉட்பட்டவர்களாகவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் 2011ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு பாலியல் நோய் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டுவருகின்றோம். கர்ப்பிணித்தாய்மாருக்குமட்டுமே அந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதில் வருடாந்தம் 8பேரில் நான்கு பேர் பாலியல் நோய் தொடர்பாக இனங் காணப்படுகின்றனர். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறானவர்கள் இனங்காணப்படும்போது மட்டக்களப்பில் உள்ள எச்.ஐ.வி பகுதிக்கு அறிவித்தல்களை வழங்குவோம்.

எச்.ஐ.வி மட்டுமன்றி அதுபோல் பல பாலியல் தொடர்பான நோய்கள் உள்ளது.மதுபோதை மற்றும் போதைவஸ்து பாவனைகள் அதிகரித்துச்செல்வதும் இவ்வாறான பாலியல் நோய்கள் அதிகரிப்பதற்கான காரணமாக அமைகின்றது. என மேலும் தெரிவித்தார்

இதேவேளை இன்றைய தினம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை மற்றும் இலங்கை குடும்பநல சங்கம் ஆகியன ஒன்றினைந்து குறித்த நிகழ்வினை முன்னெடுத்து சென்றது.

இதன்போது இரத்தப்பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை உட்பட பல்வேறு இலவச மருத்துவபரிசோதனைகள் வழங்கப்பட்டதுடன் மருத்து சோதனைகளும் நடாத்தப்பட்டு பெறுமதி மிக்க மருந்துகளும் வழங்கிவைக்கப்பட்டன.

போதையில் இருந்து மீட்போம் என்னும் தொனிப்பொருளில் போதைப்பாவனையில் அகப்பட்டுள்ளோரை அதில் இருந்து மீட்டு அவர்களை சமூகத்துடன் இணைக்கும் பணியை விமோசனா இல்லம் கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற்கொண்டுவருகின்றது.

இந்நிலையில் இந்த ஐந்து ஆண்டு பூர்த்தி நிகழ்வின்போதும் மதுபோதையினால் ஏற்படும் தீமைகள் அதன் சமூகம் தாக்கம் தொடர்பிலான விளிப்புணர்வு நிகழ்வுகளும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.