முழு நாடும் புலிகளின் கட்டுப்பாட்டிலா? கருணா கைது செய்யப்பட்டது தவறு!

 

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் கைது குறித்து தென்னிலங்கை அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

_39937843_leader 2009031060261501_87325e mahinda-and-karuna1 mr_030909_06 qoaw75

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் கருத்து வெளியிட்டனர். இந்த சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும, உதய கம்மன்பில, ரஞ்சித் த சொய்ஸா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில “விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அரச வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

யார் இந்த கருணா..? அன்று அங்குலிமாலா, கெப்பட்டி பொல போன்றவர்களைப் போன்று இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தவர். பிழையான வழியிலிருந்து சரியான வழிக்கு வந்தவர்.

கிழக்கு மாகாணத்தை கைப்பற்றிக் கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரயத்தனத்தில் கருணா மற்றும் பிள்ளையானும் முக்கிய பங்காற்றினர். இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தின் பங்காளர்களில் ஒருவராக கருணா இருக்கின்றார்.

இன்றைய அரசாங்கத்தில் அவர் நல்லிணக்க ஆலோசகராகவும், குறைந்த பட்சம் வெளி விவகார அமைச்சருக்கு நெருக்கமான ருத்ரகுமாரன், சுரேன் சுரேந்திரனைப் போன்றவர்களைப் போல வரப்பிரசாதங்களை அனுபவித்திருக்கலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதாலேயே கருணா இன்று சிறை வைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் விசேட அதிரடிப்படையின் முன்னாள் பிரதானியும் வாகன முறைகேட்டுப் பாவனை குற்றத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் மற்றும் இதர விடயங்களில் ஈடுபட்டு பாரதூர தண்டனைகளை பெறுவதற்கு ஈடானவர்களுக்கு வழக்கு தொடராமல் விடுதலை செய்வதற்காக சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில்தான் விசேட அதிரடிப் படையின் முன்னாள் பிரதானியும், கருணா கைது செய்யப்பட்டனர் என குறிப்பிட்டார்.

இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களை கைப்பற்றுவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது நோக்கமாக இருந்த போதிலும், இன்று முழு இலங்கையையும் தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றி கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றார்களா என்ற சந்தேகம் வந்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டினை முன்வைத்திருக்கின்றனர்.