மலையகத்தில் சகல பகுதிகளுக்குமான போக்குவரத்து ஸ்தம்பிதம் – விளையாட்டு மைதானமாகியது அட்டன் பஸ்தரிப்பிடம்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தனியார் பஸ் வேலை நிறுத்தப்போராட்டத்தினால் மலையகத்தில் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

தனியார் பஸ் வேலை நிறுத்தப்போராட்டத்தினால் பயணிகளுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் அட்டன் பஸ்தரிப்பிடம் விளையாட்டு மைதானமாகியுள்ளது.

அட்டன் தனியார் பஸ் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது. மலையகத்தின் பிரதான நகரான அட்டன் நகரத்திலிருந்து சேவையிலீடுபடும் தூர சேவை மற்றும் உள்ளுர் சேவைகள் அணைத்தும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

201 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் போக்குவரத்து விதியை மீறுவோருக்கு ரூபா 25 ஆயிரம் அபராதம் விதிக்க சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 02.12.2016 அதாவது இன்றைய தினம் அதிகாலை முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் தனியார் பஸ், பாடசாலை சேவை மற்றும் முச்சக்கரவண்டிகள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அட்டன் தனியார் பஸ்தரிப்பிடத்திலிருந்து சேவையிலீடுபடும் கண்டி, கொழும்பு, தலவாக்கலை, மஸ்கெலியா, பொகவந்தலாவ, ஒஸ்போன், சாஞ்சிமலை, சலங்கத்தை, எபோட்சிலி, டயகம, போடைஸ், ஓல்டல், நுவரெலியா, பலாங்கொடை போற்ற சகல மார்க்கங்களிலும் சேவையிலீடுபடும் தனியார் பஸ் சேவைகளும் சேவையில் ஈடுபடவில்லை. பஸ்தரிப்பிடத்தில் கிரிக்கட் விளையாட்டில் சாரதிகளும், நடத்துனர்களும் ஈடுபட்டுள்ளனர். அட்டன் இலங்கை போக்குவரத்து டிபோவினால் பஸ் சேவை முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவலும் படங்களும்:- நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

unnamed-1

unnamed

unnamed-2

unnamed-4

unnamed-5

unnamed-6