சுருக்கத்திற்கு சொல்லுங்க குட்பை மாதுளை ஃபேஸ் மாஸ்க் ட்ரை பண்ணுங்க

சுருக்கம் குளிர்காலத்தில் எல்லா வயதினருக்கும் வருவதுண்டு. நமது தசைகளில் இருக்கும் நெகிழ்வுத்தன்மை குறைந்து இறுக்கமடைவதால் சருமத்தில் கோடுகள் விழுந்து சுருக்கம் உண்டாகிறது.

இதற்கு காரணம் சருமத்தில் வறட்சி உண்டாவதால்தான். இதற்கு மாதுளம்பழம் உதவுகிறது. மாதுளையில் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட், விட்டமின் கே, பி, சி ஆகியவை உள்ளது.

மாதுளை, எலுமிச்சை சாறு:

புதிதாக மாதுளை பழத்தை அரைத்து அதனுடன் சில துளி எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசுங்கள். 10 நிமிடங்கள் கழித்து கழுவவும். சூரிய கதிர்களால் உண்டாகும் கருமை, சன் பேர்ன் சரும அலர்ஜி மறைந்து மின்னும் சருமம் பெறுவீர்கள்.

மாதுளை, க்ரீன் டீ மற்றும் யோகார்ட்:

அரைக் கப் அளவு கிரீன் டீ தயார் செய்து கொள்ளுங்கள். மாதுளை பேஸ்ட்டுடன் 1 ஸ்பூன் க்ரீன் டீ மற்றும் 1 ஸ்பூன் யோகார்ட் கலந்து இந்த கலவையை நன்றாக கலக்கி முகத்தில் போடுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் ஒருமுரை செய்தால் சுருக்கம் காணாமல் போய்விடும். சருமம் ஊட்டம் பெறும்.

மாதுளை மற்றும் தேன்:

இது மிகச் சிறந்த ரெசிபி. மாதுளை பேஸ்டுடன் 1 ஸ்பூன் அளவு தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து கழுவவும். முகம் மின்னுவதை பார்ப்பீர்கள். அருமையான பொலிவை தரும்.

மாதுளை மற்றும் கோகோ:

கோகோ பவுடர் அரை ஸ்பூன் எடுத்து அதனுடன் அரைத்த மாதுளை பழத்தை சேருங்கள். இந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல பலனைத் தரும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு ஏற்றது.

மாதுளை மற்றும் தயிர்:

மாதுளம் பழ விதைகளை தயிருடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் பளிச்சிடும். மிருதுவான சுருக்கமில்லாத சருமம் கிடைக்கும்.

pomegranateface_001-w245