இன்றைய ராசி பலன்கள்

rasi_palan_001-w245

மேஷம்:

மற்றவர் செயலை விமர்சிக்க வேண்டாம். தொழில், வியாபாரத் தேவைக்காக கடன் வாங்க நேரிடும். லாபம் மிதமாக இருக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.

ரிஷபம்:

எந்த செயலையும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறு தடைகள் குறுக்கிடலாம். மிதமான அளவில் லாபம் இருக்கும். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். உறவினரால் உதவியுண்டு.

மிதுனம்:

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வருவீர்கள். நல்லவர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பெண்கள் சந்தோஷ வாழ்வு நடத்துவர்.

கடகம்:

கடந்த கால முயற்சிக்குரிய பலன் வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் பன்மடங்கு உயரும். குடும்பத்தில் சுப விஷயம் குறித்த பேச்சு நடக்கும். பெண்களுக்கு உறவினர் மத்தியில் கவுரவம் உண்டாகும்.

சிம்மம்:

முக்கிய பணிகளை தாமதமின்றி நிறைவேற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உடல் நலனிற்காக சிகிச்சை பெறுவீர்கள். பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம்.

கன்னி:

பேச்சு, செயலில் தடுமாற்றம் ஏற்படலாம். தொழிலில் விற்பனை சுமாராக இருக்கும். மிதமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச் சுமையைச் சந்திப்பர். பெற்றோரின் ஆறுதல் பேச்சு நம்பிக்கையளிக்கும்.

துலாம்:

பேச்சில் இனிமை நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் செழிக்க புதியவர்களின் உதவி கிடைக்கும். பணவரவில் திருப்தியான நிலை உண்டாகும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் அக்கறையுடன் ஈடுபடுவர்.

விருச்சிகம்:

குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். லாபம் பன்மடங்கு உயரும். புத்திரர்களின் செயல்பாடு பெருமையளிக்கும். பொன், பொருளும் சேர வாய்ப்புண்டு.

தனுசு:

நண்பர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். லாபம் படிப்படியாக உயரும். வெளியூர் பயணம் பயனறிந்து செல்வது நல்லது. பணியாளர்கள் பணியில் விழிப்புடன் இருக்கவும்.

மகரம்:

பேச்சை குறைத்து பணியில் ஆர்வம் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.

கும்பம்:

சமயோசிதமாக செயல்பட்டு பிரச்னையைத் தவிர்ப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் படிப்படியாக அதிகரிக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

மீனம்:

மனதில் உற்சாகம் மேலோங்கும். குடும்ப பிரச்னையில் சுமுகத் தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை படைப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் பெறுவர்.