வைத்தியர்களின் கவனயீனத்தால் நோயாளிக்கு நேர்ந்த அவலம்

download-1

மூக்கில் ஏற்பட்ட கட்டி காரணமாக நுவரெலியா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்குச் சென்ற நோயாளிக்கு நேர்ந்த நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபரை சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் அறைக்குக் கொண்டு சென்று, கடைசி நேரத்தில் திருப்பி அனுப்பிய சம்பவம் இடம்பெற்றுள்ளது .

அதே பகுதியை சேர்ந்த 56 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மூக்கில் ஏற்பட்ட கட்டி காரணமாக நுவரெலியா வைத்தியசாலையில் குறித்த நபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த வைத்தியசாலையில் தங்கியிருந்த நிலையில் மூக்கில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தனக்கு தவறுதலாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதை உணர்ந்த குறித்த நபர், மீண்டும் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.

அதன்பின்னர், கடந்த 29ம் திகதி அவர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தவறுலான சிகிச்சையை சரி செய்வதற்காக மீண்டும் சத்திர சிகிச்சை தியேட்டருக்கு 30ம் திகதி ( கடந்த புதன்கிழமை) கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு காரணமாக மீண்டும் சிகிச்சை வழங்காமல் ஏமாற்றப்பட்டுள்ளார்.

மீண்டும் எதிர்வரும் 13ம் திகதி வருமாறு கூறி, குறித்த நபரை வைத்தியர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வைத்தியசாலையின் நிர்வாகம் மற்றும் வைத்தியர்களின் முறையற்ற செயற்பாடு காரணமாக குறித்த நோயாளி மனமுடைந்த நிலையில் காணப்படுவதாக குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.