அட்டனில் போராட்டத்திற்கு ஆதரவு நல்கக்கோரி இரு குழுக்களுக்கிடையில் முறுகல்

அட்டன் நகரில் முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் இரு குழுக்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதீயில் முச்சக்கர வண்டியாளர்கள் தண்டப்பணம் அறவீடு தொடர்பில் சேவை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், போராட்டத்திற்கு ஆதவு நல்கும் வகையில் அட்டன் நகரிலும் சேவையிலீடுபடும் ஒரு குழுவினர் சேவை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சேவையிலீடுபட்ட மற்றொரு முச்சக்கரவண்டி குழுக்களுக்கு இடையில் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவேண்டும் எனக் கோரிய நிலையிலே முறுகல் நிலையேற்பட்டது. எனினும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து சென்று தலையிட்ட நிலையில் முறுகல் நிலை சுமூக நிலைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

unnamed-1

unnamed-2

unnamed-4