வவுனியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை!-வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன்

வவுனியாவில் அதிகப்படியான குளிர் காலநிலை காணப்படுவதனால் சிறுவர் மற்றும் முதியோர்களை அவதானமாக இருக்குமாறு வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியாவில் திடீரென கடும் குளிரான காலநிலை காணப்படுவதனால் பொது மக்கள் அவதானமக இருக்கவேண்டிய தேவையுள்ளது.

குறிப்பாக குளிரான சூழல் அமையப்பெறும் இடங்களில் இருந்து அகல்வது சிறந்ததாக காணப்படுவதுடன் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தமக்கு வைத்தியர்களால் வழங்கப்பட்ட மாத்திரைகளை சீராக பயன்படுத்தவேண்டும்.

அத்துடன் சிறுவர்கள் தலைப்பகுதி உட்பட உடலை குளிரில் இருந்து பாதுகாக்கும் உடைகளை அணிவதுடன் குளிர்ப்பிரதேசத்தில் விளையாடுவது மழை நீரில் நனையாது இருப்பதிலும் அவதானம் செலுத்த வேண்டும்.

இதேவேளை சாதாரண குளிர் நீரை பொது மக்கள் பருகாது இளஞ்சூடான நீரை பருகுமாறும் அவர் கோரியுள்ளார்.