பிரான்ஸ் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!! தமிழ் அகதிகளின் நிலை?

பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்ட் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என அதிரடியாக அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

எதிர்வரும் 2017ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சோசலிஸ்ட் வேட்பாளராக பிரான்சுவா ஹோலண்ட் போட்டியிடுவார் என கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மீணடும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என்ற அதிரடி அறிவிப்பை ஹோலண்ட் வெளியிட்டுள்ளார்.

அவரது ஆட்சியில் நாட்டில் இடம்பெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர்.

கடந்த நவம்பர் மாதம் பாரிஸில் இடம்பெற்ற தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பிரான்ஸில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், மக்களிடையே ஹோண்டேவின் புகழ் மதிப்பு பெரிதும் சரிந்தது. இதை தொடர்ந்தே அவர் இந்த அதிரடி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்து ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சோசலிஸ்ட் வேட்பாளராக யார் போட்டியிடுவர் என்பது தெளிவற்றதாக உள்ளது.

ஆட்ச்சி மாறினால் அகதிகளின் நிலை என்னாகும் என்பது கேள்வி ? இதில் குறிப்பாக தமிழர்களின் நிலை என்னவாகும் என்பது பலருக்கும் உள்ள வினா இலங்கையில் நல்லாட்சி ஏற்பட்டுள்ள நிலையில் புதிய ஜனாதிபதி எவ்வகையான முடிவினை எடுப்பார் என்பதில் பலரிடமும் குழப்பம் உள்ளமை குறிப்பிடத் தக்கது.