யாழில் ஒரே நாளில் 24 வீடுகளை சின்னா பின்னமாக்கிய நாடா.-நா.வேதநாயகன்

நாடா புயலின் காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் 24 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இது குறித்து அரச அதிபர் மேலும் தெரிய வருவது ,
நாடா புயலின் காரணமாக வடக்கில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ். குடாநாட்டில் நேற்றைய தினம் சில சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 24 வீடுகள் சேதமடைந்துள்ளன. இவ்வாறு சேதமடைந்த வீடுகளில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் மாதகல் கிழக்கில் உள்ள ஓர் வீடும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒர் வீடும் முழுமையாக சேதமடைந்துள்ளன.

மாதகல் வீட்டின் மீது நேற்றைய தினம் பனனமரம் முறிந்து வீழ்ந்தமையினாலேயே குறித்த வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது. அதேபோல் நல்லூர்ப் பிரதேசத்திலும் ஓர் வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் மேலும் 22 வீடுகள் ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளில் சேதமடைந்துள்ளன.
இதேவேளை நேற்றைய தினம் தொழிலுக்குச் சென்ற 6 படகுகள் கானாமல் போயிருந்தன பின்னர் அவர்களை ஏனைய மீனவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டனர். இதில் மாதகலில் ஓர் படகில் சென்ற இருவர் நேற்று இரவுதான் கண்டு பிடிக்கப்பட்டனர். இதேவேளை மழை தொடரிம் என எதிர்பார்க்கப்படுவதனால் பாதிப்புக்கள் நிகழக்கூடும் என்ற அச்சமும் உள்ளது.

இது வரைக்கும் எந்த இடப்பெயர்வுகளும் பதிவிடப்பமாத போதிலும் 57 குடும்பங்களைச் சேர்ந்த 157 பேர் பாதிப்படைந்துள்ளனர். அனர்த்தம் ஏதும் இடம்பெற்றால் எதிர்கொள்ளும் வகையில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் தயார் நிலையில் உள்ளனர். என்றார்…jaffna-housejaffna-house01