பிள்ளையான் அடிப்படை மனித உரிமைமீறல் மனுதாக்கல்

pillaiyan

பிள்ளையான் என்று அழைக்கப்படும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவசேனசத்துறை சந்திரகாந்தன் இன்று(02) அடிப்படை மனித உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் எதுவும் இன்றி தன்னை ஒரு வருடமாக தடுப்புக் காவலில் வைத்துள்ளமை தனது அடிப்படை மனித உரிமையை மீறும் செயலாகும் என பிள்ளையான் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு தொடர்பில் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.