ஞானசார தேரருக்கு எதிராக அசாத் சாலி முறைப்பாடு

சுதந்திரக் கட்சி சார்பில் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான முனைப்பில் உள்ள ஆசாத் சாலி இன்று ஞானசார தேரருக்கு எதிராக முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளார்.

முஸ்லிம்களின் புனித திருக்குர்ஆன் மற்றும் அல்லாஹ் என்பவற்றுக்கு எதிராக செயற்பட்ட ஞானசார தேரருக்கு எதிராக தௌஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக் கடுமையான பதிலடி கொடுத்திருந்தார்.

இதனையடுத்து அப்துல் ராசிக்குக்கு எதிராக ஆசாத் சாலி முறைப்பாடொன்றைச் செய்து ஜனாதிபதி ஊடாக அவரைக் கைது செய்ய வைத்திருந்தார்.

இந்தச் சம்பவம் கொழும்பு முஸ்லிம்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் ரிசாத் கட்சிக்கும் கிழக்கு மாகாணம் மற்றும் தென்னிலங்கையில் கடுமையான எதிர்ப்பலை உருவாகிக் கொண்டிருக்கின்றது.

இதேவேளை ஆசாத் சாலி ஞானசார தேரருக்கு எதிராக பெயரளவு முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

625-0-560-320-160-600-053-800-668-160-90-11 625-0-560-320-160-600-053-800-668-160-90-12 625-0-560-320-160-600-053-800-668-160-90-13