வாவியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் 2 hours agoசமூகம்

dsc_0609

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர், மட்டக்களப்பு முகத்துவார வாவியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த திருபாலசிங்கம் சிவதாசன் (வயது 47) எனும் பொலிஸ் உத்தியோகத்தர் சுகயீனம் காரணமாக, கடந்த 26 ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 16ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.

இங்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் நேற்று(01) இரவு 10 மணி தொடக்கம் காணாமல் போயுள்ளார்.

இவரை வைத்தியசாலையின் விடுதியில் தேடிய நிலையில் இவர், மட்டக்களப்பு – கல்லடி முகத்துவாரத்தின் வாவியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு – கல்லடி முகத்துவாரத்தின் வாவியில் சடலமொன்று கிடப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்களும் மீனவர்களும் சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த நபரின் சடலத்தை அவரது உறவினர்கள் அடையாளம் காட்டினர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-14

dsc_0609