வவுனியா வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வவுனியா பொது வைத்தியசாலையின்ஆண் தாதியொருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமது எதிர்ப்பினை தெரிவித்து வவுனியா பொது வைத்தியசாலையின் தாதிமார் இன்று மதியம் உணவு இடைவேளையின் போது வைத்தியசாலையின் முன் வழியாக பேரணி சென்று கண்டி வீதியால் பின் வாசல் வழியாக வைத்தியசாலையினை சென்றடைந்தனர்.

வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி உத்தியோகத்தர் ஒருவர் மீது வைத்தியசாலை விடுதியில் வைத்து இனந்தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, பொலிஸார் விசாரணைகள் மேற்கொள்ளாத பட்சத்தில் தொடர்ந்தும் போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளதாக போராட்டத்தில் கலந்து கொண்ட தாதி உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தாக்குதலுக்கு இலக்கான ஆண் தாதி உத்தியோகத்தர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-15 625-0-560-320-160-600-053-800-668-160-90-16 625-0-560-320-160-600-053-800-668-160-90-17 625-0-560-320-160-600-053-800-668-160-90-18