ஏரிக்குள் பேருந்து விழுந்து பயங்கரம்! 17 பேர் பரிதாபமாக பலி

625-500-560-350-160-300-053-800-748-160-70-4

சீனாவில் இன்று காலை 20 பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் உள்ள மியொலிங் நகரில் இன்று காலை எப்போதும் போல மக்கள் சாலையில் தங்கள் வாகனங்களிலும், பொது பேருந்துகளிலும் பரபரப்பாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு மாநகர பேருந்து டிப்போவிலிருந்து 20 பயணிகளை ஏற்றி கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்தது.அப்போது திடீரென பேருந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை பக்கத்தில் அமைந்துள்ள ஏரியில் அதன் சுவற்றை உடைத்து கொண்டு உள்ளே விழுந்தது.

இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள். மேலும் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் இறந்தவர்களின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.