கல்யாணம் முதல் காதல்வரை புது ப்ரியாவின் வயசு என்ன தெரியுமா?

இளைஞர்களையும் கவர்ந்த சீரியல் என்றால் அது கல்யாணம் முதல் காதல்வரை தான். நாயகி ப்ரியாவுக்காகவே பார்த்தனர். ஆனால் அவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதையடுத்து ப்ரியா கதாபாத்திரத்தில் சயித்ரா என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

இவர் இதே சீரியலின் கன்னட பதிப்பான அவனு மாத்தே ஷர்வானியில் நடித்து வந்தார். பெங்களூரில் பிறந்து வளர்ந்து வந்த இவரின் முதல் தமிழ் சீரியல் இது தான். மிகவும் மெச்சூரிட்டியான பெண்ணாக தெரியும் இவருக்கு வயது 21 தானாம். இவர் பிசிஏ படித்து வருகிறாராம்.

தீவிர சூர்யா ரசிகையான இவருக்கு சூர்யாவுடன் நடிக்க விருப்பமாம். விரைவில் இவரையும் தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.