இவர்கள் இரண்டு பேரும் தான் இந்திய அணிக்கு…ஜெயசூர்யா புகழாரம்!

இந்திய அணியின் மிகப் பெரிய வெற்றிக்கு சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் பங்களிப்பு அதிகம் உள்ளது என இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயசூர்யா கூறியுள்ளார்.

இந்திய அணியின் தற்போது அசைக்க முடியாத சக்திகளாக விளங்குபவர்களில் ஒருவர்களாக கோஹ்லியும், அஸ்வினும் விளங்குகின்றனர்.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயசூர்யா இந்திய அணியின் தலைவர் கோஹ்லி மற்றும் அஸ்வினைப் பற்றி கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், இந்திய அணியில் உள்ள விராட் கோஹ்லி நாட்டுக்காக அர்பணித்து விளையாடுகிறார், ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் தீவிர பயிற்சி மேற்கொள்கிறார், குறிப்பிட்ட போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால், அவருடைய பங்களிப்பு அதில் இருக்கும் என்றும் அவர் ஒரு நேர்த்தியான ஆட்டக்காரர் எனவும் கூறியுள்ளார்.

விராட் கோஹ்லி மட்டுமின்றி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினும் இதில் அடங்குவார் என கூறியுள்ளார். அஸ்வின் இந்திய அணிக்கு ஒரு மேட்ச் வின்னராக பல முறை நிரூபித்து காட்டியுள்ளார். இந்திய அணி ஒரு மிகப்பெரிய வெற்றி பெறும் போது அதில் அஸ்வினின் பங்களிப்பு இருக்கும் என கூறியுள்ளார்.

அவர் நாளுக்கு நாள் தன்னுடைய சுழற்பந்து வீச்சில் மாற்றங்களை கொண்டு வருகிறார் என்றும் புது விதமான பந்து வீச்சு முறைகளை பின்பற்றி வருகிறார் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.