கால்பந்தாட்ட கிளப்களில் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்! பாதிக்கப்பட்ட 350 பேர் புகார்

625-500-560-350-160-300-053-800-748-160-70-6

பிரித்தானியாவில் உள்ள கால்பந்தாட்ட கிளப்களில் சுமார் 350 பேர் குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தலைமைக் காவலரான சைமன் பெய்லி கூறியதாவது, நாட்டில் அதிகரித்து வரும் கால்பந்தாட்ட கிளப்களில் குழந்தை பாலியல் துஷ்பிரயோக புகார்கள் குறித்த கால்பந்து கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றி வருகின்றோம்.

குழந்தைகளுக்கெதிராக வதைத் தடுப்புச் தேசிய சங்கம், கடந்த நவம்பர் 23ம் திகதி புகார் அளிக்க தொலைபேசி எண் ஒன்றை வெளியிட்டது.

அதில், தற்போது வரை 860 பேர் அழைப்பு விடுத்து குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான தகவல்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளனர்.

புகார்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்கான ஊக்குவிப்புகள் தொடரும். அனைத்து புகார்கள் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு கிளப் அணியில் பயிற்சி பெற்ற 20க்கும் மேற்பட்ட வீரர்கள், தங்கள் பயிற்சியாளர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொதுவெளியில் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, குறித்த பயிற்சியாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பலர் தைரியமாக முன்வந்து புகார் அளித்து வருகின்றனர்.

தற்போது, வெளிச்சத்திற்கு வந்த சம்பவங்களின் மூலம் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.