இலங்கை பந்து வீச்சாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்: வாசிம் அக்ரம்

இலங்கை அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள், ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதற்காக இலங்கை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாசிக் அக்ரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் இலங்கை விரர்கள் குறித்து கூறுகையில், இலங்கை அணியில் சிறப்பான பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என்றும் கடந்த 1990 ஆம் ஆண்டுகளில் பெரும்பாலான பந்து வீச்சாளர்கள் 130 முதல் 140 கி.மீற்றர் வேகத்திற்கு பந்து வீசினர் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இலங்கை அணியில் தற்போது உள்ள பந்து வீச்சாளர்கள் தங்கள் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் பந்து வீசும் போது சுவிங் செய்வதை அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதே இலங்கை அணியில் தான் உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்காளாக சமீந்த வாசும், முத்தையா முரளிதரனும் இருந்தனர் எனவும் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாசிக் அக்ரம் 414 டெஸ்ட் விக்கெட்டுகளையும், 356 ஒரு நாள் போட்டிகளில் 502 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.