இலங்கைக்கான ஜப்பானின் விஷேட தூதுவர் யசூசி அகாஷி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை இன்று அலரி மாளிகையில் சந்தித்து பேசியுள்ளார்

68

 

 

இலங்கைக்கான ஜப்பானின் விஷேட தூதுவர் யசூசி அகாஷி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை இன்று அலரி மாளிகையில் சந்தித்து பேசியுள்ளார். ஜப்பானியப் பிரதமர் நாளை இலங்கை வருகிறார். அதன்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகள், மற்றும் செயற்பாடுகள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டதென்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இலங்கையில் ஜப்பான் அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் இந்தச் சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சஜின் டி வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி சேனுகா வீரக்கொடி, ஜப்பானுக்கான இலங்கைத்தூதுவர் வசந்த கரன்னகொட ஆகியோரும் கலந்து கொண்டனர்.

SHARE