இலங்கை செய்திகள்

கோத்தபாய உத்தரவின்படி பாலசந்திரன் கொலை செய்யப்பட்டது அம்பலம்

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச, மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, உங்களின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களை அழித்து விடுமாறு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை …

Read More »

பாலசந்திரன் என்ற சிறுவனை சுட்டுக் கொன்றவர்கள் சிறுவர் உரிமை பற்றி பேசுவதா? பா.அரியநேத்திரன் கேள்வி

இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடைய 12 வயதான மகன் பாலச்சந்திரன் எனும் சிறுவனுக்கு, இடக்கையால் பிஸ்க்கட்டை காட்டி வலது கையால் இராணுவத்தினர் சுட்டுக் கொன்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.   நேற்று பாராளுமன்றத்தில் சிறுவர், பெண்கள் தொடர்பான பாராளுமன்ற குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.   அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்.   எமது பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் நினைவு நாள் நேற்று மூன்று வருடங்களில் மூன்று தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதனடிப்படையில் எமது கட்சி பாராளுமன்றஉறுப்பினர்களான யோசப் பரராஜசிங்கம், சிவநேசன், ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன்ஆகியோரே படுகொலை செய்யப்பட்வர்களாவர்.   2014.3.15ஆம் திகதி வன்னியிலே தங்களுடைய அண்ணாவை தாருங்கள் என்று கேட்டதற்காக, விபூசிக்காவையும்அவரது தாயாரையும் இராணுவத்தினர் கைது செய்து இன்று வரை விடுதலை செய்யாமல், தாயை பூசாமுகாமிலும், பிள்ளையை அனாதை இல்லத்திலும் வைத்திருக்கின்றார்கள். இதுதான் இவர்கள் கூறும் சிறுவர்உரிமை.   ஒரு தாயும் மகளும் இணைந்து வாழ்ந்த ஒரு குடும்பத்தில் தாயை வேறாகவும் குழந்தையை வேறாகவும் பிரித்துவைத்திருப்பது எந்த விதத்தில் நியாயமாகும்.   இந்த நிலமை இந்த நாட்டின் ஜனாதிபதிக்கோ இந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாகவோ, பாராளுமன்றஉறுப்பினர்களாகவோ இருப்பவர்களுக்கு ஏற்பட்டால் அவர்களது மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதனை ஒருகனம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.   இங்கு உரையாற்றும் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண்களுக்கு அனைத்திலும் சம உரிமைவழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் எம்மைப்பொருத்த வரையில் வட, கிழக்கில் உள்ள பெண்களுக்குசிறைச்சாலைகளைத் தான் வழங்கியிருக்கின்றார்கள்.   போரினால் பாதிக்கப்பட்டு வட,கிழக்கு பகுதியில் 89000 ஆயிரம் விதவைகள் இன்றும் எந்த அடிப்படைவசதிகளும் இன்றி தங்களது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றார்கள். எந்த சுயதொழிலும் செய்ய முடியாதஅளவிற்கு அவர்கள் மிகுந்த கஷ்ரங்களை அனுபவித்து வருகின்றார்கள்.   அது மாத்திரமல்ல யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களாக வட,கிழக்குப் பகுதியில் 40000 ஆயிரம் பேர்இருக்கின்றார்கள். அதில் கணிசமானோருக்கு குழந்தைகள் இருப்பதும் அவர்களை பராமரிப்பதற்குக்கூடஇவர்களால் முடியாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் 12770அங்கவீனர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.   இவர்களை இந்த நாட்டு ஜனாதிபதி உட்பட ஏனைய அமைச்சர்கள் எவரும் இதுவரை கண்டு கொள்ளவும்இல்லை. இந்த வரவு செலவுத்திட்டத்தில் இவர்களுக்கு எந்தவிதமான நிவாரணங்களும் வழங்கப்படவில்லை.   இலங்கை அரசாங்கம் கூறும் சமாதானகாலப் பகுதியில் அதிகளவான சிறுவர் துஸ்பிரயோகங்கள்இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் 546 சிறுவர்துஸ்பிரயோகங்கள் நடைபெற்றிருப்பதுடன் ஒழுக்க சீர்கேடுகளும் அதிகரித்தே காணப்பட்டிருக்கின்றது. ஆனால்யுத்தம் நடைபெற்றகாலத்தில் இவ்வாறான சிறுவர் துஸ்பிரயோகங்கள் குறைவாகவே இருந்தது.   1925ஆம் ஆண்டு ஜெனிவா மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஒரு நாட்டில் போர்இடம்பெறுமாக இருந்தால் போருக்கு பிற்பட்ட காலத்தில் போர்க்கைதிகளும் போர் செய்த பிரதேசங்களையும்மனிதாபிமான அடிப்படையில் கையாள வேண்டும் என்று இத்தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கின்றது.   ஆனால் இலங்கை இத்தீர்மானத்தினை முழுமையாக உதாசீனம் செய்திருக்கின்றது. இவ்வாறான விடயங்களைதெளிவுபடுத்துவதற்காக தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றம் சென்று எமது மக்களின்பிரச்சனைகளை எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றது எனவும் கூறினார்.   …

Read More »

இந்திய இராணுவ யுத்த கல்லூரியை சேர்ந்த 20 பேர் அடங்கிய இராணுவ குழு தற்பொழுது இலங்கை வந்தடைந்துள்ளது.

 இந்திய இராணுவ யுத்த கல்லூரியை சேர்ந்த 20 பேர் அடங்கிய இராணுவ குழு தற்பொழுது இலங்கை வந்தடைந்துள்ளது. இந்த குழுவிற்கு தலைமை தாங்கி வந்துள்ள பிரிகேடியர் சிந்து இந்த கல்லூரியின் இயக்குனர் ஆவார். இவருடன் உயர் அதிகாரிகள் நால்வரும் இணைந்துள்ளனர். இந்த …

Read More »

உள்ளுராட்சி சபைகளில் நிதி மோசடி! – சி.வி.கே.சிவஞானத்திற்கு வல்வை நகரபிதா கண்டனம்.

வடமாகாண சபையின் பேரவைத் தலைவர் திரு.சி.வி.கே.சிவஞானம் கடந்த 5 ஆம் திகதி பேரவைச் செயலகத்தில் வைத்த, பத்திரிகையாளர் மகாநாட்டில், வல்வெட்டித்துறை நகரசபையில் 10 இலட்சமும், பருத்தித்துறை பிரதேச சபையில், 7 இலட்சம் ரூபாவும் முறைகேடான  கொடுப்பனவுகள் இடம் பெற்றதாகக் குறிப்பிட்ட செய்திகள் …

Read More »

இந்தியா இன்றி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது:- விக்னேஸ்வரன் புதிய கண்டுபிடிப்பு

இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிட்டால் தான் நிரந்தர தீர்வுகாண முடியும் என வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த 7–ந் திகதி சென்னைக்கு விஜயம் செய்த விக்னேஸ்வரன், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இன்று காலை சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த …

Read More »

வடக்கில் வாக்குகளைப் பெறுவது சவால்! கூட்டமைப்புக்கு ஐ.தே.க அழைப்பு-நிதானமாக சிந்திக்கும் சம்பந்தன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மாகாணத்தின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதே அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இருக்கும் மிகப்பெரிய சவாலாகும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. பொது எதிரணியுடன் கைகோர்த்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேண்டும் என …

Read More »

முதலில் தேர்தல் அறிவிக்கப்படட்டும். அதன்பின்னர் இத்தகைய அழைப்பு விடுக்கப்பட்டால் நாம் அதனை ஆழமாக பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம்-இரா.சம்பந்தன்

  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசுத் தரப்பு வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை ஆதரிக்கும் நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவேண்டும் என்று அரசுத் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஆழமாகப் பரிசீலிக்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் …

Read More »

ஜனாதிபதி ராஜபக்‌ஷ அவர்கள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விவசாய ஆராய்ச்சி சிறப்புத்திறன் விருதுகள் விழா

  ஜனாதிபதி ராஜபக்‌ஷ அவர்கள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விவசாய ஆராய்ச்சி சிறப்புத்திறன் விருதுகள் விழா 2014 இல், நவ. 10, 2014 இல், கலந்துகொள்கிறார். அதிசிறப்பான விவசாய ஆராய்ச்சிகளை மேற்கொண்ட விஞ்ஞானிகளும், தேசிய விவசாய சிறப்புத்திறன் விருதுக்காக …

Read More »

வடக்கு மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி ஒருபுறம் நடைபெறுகிறது. அதேவேளையில், இன்னொருபுறம் இலங்கை அரசு ஆதரவுடன் ஆளுநர், முதன்மைச் செயலாளர் மற்றும் சில அதிகாரிகள் தலைமையில் முரண்பாடான மற்றொரு நிர்வாகமும் செயல்படுகிறது.

வடக்கில் தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசு ஒன்று இயங்கினாலும், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் தமது கட்டுப்பாட்டிலேயே வடபகுதி மக்களும், நிர்வாகக் கட்டமைப்புக்களும் இருக்கவேண்டும் என்பதில் குறியாகவுள்ளனர். அதுமட்டுமன்றி இனப்பரம்பலை மாற்றியமைக்கவும் அவர்கள் முயற்சிக்கின்றனர். இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்குமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். மக்கள் சிவில் …

Read More »

முடியுமா, முடியாதா? அலரி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தீர்ப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட முடியுமா, முடியாதா என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று மாலை அலரி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் ஆதரவாகவும் எதிராகவும் 38 விரிவுரை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. …

Read More »