பிராந்திய செய்திகள்

திருகோணமலை சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் விசேட கூட்டம்

திருகோணமலை மாவட்ட சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம் நேற்று(செவ்வாய்கிழமை) மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்டம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவர்ந்த பல...

இனம் தெரியாத நபர்களினால் உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல்

பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலுள்ள யாழ்.தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் (மாவட்ட செயலகம்) முன்பாக இனம் தெரியாத நபர்களினால் உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் மல்லாகத்தை சேர்ந்த பொன்னம்பலம் பிரகாஸ் எனும்...

புதிய பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க நடவடிக்கை முன்னெடுப்பு

முல்லைத்தீவு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே இதனைத் தெரிவித்துள்ளார். களுத்துறை, நுவரெலியா, மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு ஆகிய...

கடவையைவிட்டு தடம் புரண்ட கடுகதி புகையிரம்

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரம் இன்று(புதன்கிழமை) காலை புகையிரத கடவையைவிட்டு தடம் புரண்டதால் வடபகுதிக்கான புகையிரத போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதுடன் பயணிகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று...

வைத்தியர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலினால் சேதமடைந்த வைத்தியசாலை சொத்துக்கள்

இரு வைத்தியர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலினால் வைத்தியசாலை சொத்துக்கள் சேதமடைந்த சம்பவம் அம்பாறை – நிந்தவூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது காயமடைந்த வைத்தியர்கள் இருவரும் ஏட்டிக்கு போட்டியாக இரு வேறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று...

மீண்டும் திறக்கப்படும் இலங்கை கோள் மண்டலம்

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த இலங்கை கோள் மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை கோள் மண்டல...

காங்கேசன்துறையில் இருந்து ஆரம்பிக்கப்படும் போக்குவரத்து சேவை

இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையும், அம்பலாங்கொட சாலையும் இணைந்து காங்கேசன்துறை - மஹரகம வைத்திய சாலை ஊடாக காலிக்கு புதிய போக்குவரத்து சேவை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். குறித்த புதிய பேருந்து  நேற்று (திங்கட்கிழமை)...

நாடு திரும்பிய பிலிப்பைன்ஸில் சிக்கித் தவித்த இலங்கையர்கள்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பிலிப்பைன்ஸில் சிக்கித் தவித்த 41 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இலங்கை எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலமாக அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளனர். நாட்டை...

வெலிகடை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவருக்கு கொரோனா

வெலிகடை  சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, குறித்த கைதியுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஏனைய கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு...

குணமடைந்து வெளியேறிய 3 கடற்படை வீரர்கள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 3 கடற்படை வீரர்கள் பூரண குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து 888 கடற்படையினர் இதுவரையில்...