பிராந்திய செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட கைதிகள்

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையிலிருந்து ஆறு கைதிகள் பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் சிறைச்சாலையில் உள்ளவர்களில் 512 பேர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில்...

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரு பிரிவுகளாக இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் ஒரு தரப்பினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கையின் சுதந்திர தினமான இன்று...

திருகோணமலையில் பாலியல் விடுதியொன்று முற்றுகை

திருகோணமலை - உப்புவெளி பகுதியில் வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் நடத்தி வந்த பாலியல் விடுதியொன்று முற்றுகையிடப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதன்போது நடத்துனரான உவர்மலை வீதியை சேர்ந்த 32 வயதுடைய...

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்திற்கான கூட்டம்

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்திற்கான கூட்டுச் ஜனநாயகப் பணிக்குழு உறுப்பனர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் நடைபெற்றுள்ளது. காரைதீவு, விபுலானந்தா கலாசார மண்டபத்தில் இன்றைய தினம் கிழக்குத் தமிழர் கூட்மைப்பின் தலைவர் த.கோபாலகிருஸ்ணன் தலைமையில்...

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மண்ணுக்குள் தோண்டி எடுங்கள்! -ராஜபக்சக்கள் பொறுப்பு அல்ல.

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் எனக் கூறப்படுபவர்கள் எவரும் இன்று உயிருடன் இல்லை. அவர்களின் உயிரிழப்புக்கு ராஜபக்சக்கள் பொறுப்பு அல்ல. இதற்கு விடுதலைப்புலிகள்தான் முழுப் பொறுப்பு. இப்படியான நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் வேண்டுமெனில்...

சீனக்குடா பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது.

திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீரோட்டுமுனை, கரடிபுவல் பகுதியில் ஹெரொயின் போதைப்பொருளுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொண்ட திடீர்...

வடக்கில் சோதனை நடவடிக்கையால் அசோகரியத்தில் பயணிகள்.

வடக்கில் ஏ9 வீதியை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் சோதனை நடவடிக்கைகளால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ஆனையிறவு, மாங்குளம், புளியங்குளம், ஓமந்தை போன்ற பகுதிகளில் இராணுவச் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு...

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 8பேர்  கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை, கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களை திருகோணமலை மீன்பிடி திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை உயர்...

உணவு விஷமடைந்தமை காரணமாக 41 மாணவர்கள் பாதிப்பு

உணவு விஷமடைந்தமை காரணமாக, ஹட்டன் கல்வி வலயத்தின் கினிகத்தேன – களுகல சிங்கள வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை உணவை உட்கொண்டதன் பின்னர் மாணவர்களுக்கு மயக்கம், வாந்தி ஏற்பட்டதாக...

நாட்டை வந்தடைந்த கல்விக்காக சீனாவுக்கு சென்ற மாணவர்கள்

உயர் கல்விக்காக சீனாவுக்கு சென்றிருந்த மேலும் 40 மாணவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை)  இரவு மற்றும் இன்று அதிகாலை வேளைகளிலேயே குறித்த மாணவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இதேவேளை சீனாவில் 284 இலங்கையர்கள் மாத்திரமே தற்போது...