பிராந்திய செய்திகள்

வடமேல், மேல் மாகாணங்களில் அதிக வெப்பம் – மக்களுக்கு எச்சரிக்கை.

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை உயர் நிலையில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடமேல், மேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, மன்னார் மாவட்டங்களிலேயே இவ்வாறு வெப்பநிலை உயர் நிலையில் காணப்படுவதாக அத்திணைக்களம்...

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது.

டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த நால்வர் உயிரிழந்ததையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத்,...

வறட்சியான காலநிலைக் காரணமாக 4 மாவட்டங்களில் இரண்டு இலட்சத்து 28,394 பேர் பாதிப்பு.

நிலவும் வறட்சியான காலநிலைக் காரணமாக 4 மாவட்டங்களில் இரண்டு இலட்சத்து 28,394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் வசிப்பவர்களே வறட்சி காரணமாக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தில் சுமார் 2 இலட்சத்து 15,525 பேர்...

ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கான நேர்முக தேர்வு.

குறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத் திட்டத்தின் கீழ் நேர்முகப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. மாவட்டங்கள் தோறும் இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் நான்கு தினங்களுக்கு நேர்முகப்...

E.P.D.P வசம் நெடுந்தீவு பிரதேச சபை.

நெடுந்தீவு பிரதேச சபையினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. நெடுந்தீவு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு நேற்று(செவ்வாய்கிழமை) பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பெட்ரிக் டிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. தமிழ்...

மன்னார் ‘சதொச’ மனிதப் புதைகுழி வழக்கு மார்ச் மாதம் 5ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மன்னார் ‘சதொச’ மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரனை எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் மன்னார் ‘சதொச’...

வீதி போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு கடற்படையினர் மற்றும் விமானப்படையினரின் உதவியினைப் பெறுவதற்கு தீர்மானம்.

கொழும்பு வீதி போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினர், பொலிஸாருக்கு மேலதிகமாக கடற்படையினர் மற்றும் விமானப்படையினரின் உதவியினைப் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இராணுவ பொலிஸார் போக்குவரத்து கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என கடந்த...

மன்னாரில் மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி, கவனயீர்ப்பு போராட்டம்

  மன்னாரில் மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார்...

ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 64பேரில் இருவர் பிணையில்.

  ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்த 64பேரில் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் ஏனையவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாத...

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு...