செய்திகள்

10 ஆயிரத்து 795 பேர் இதுவரை தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வீடுதிரும்பியுள்ளனர்

நாடு முழுவதும் உள்ள 41 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 4,649 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்களில் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்த 31 பேர்...

நாடு முழுவதும் 65 ஆயிரத்து 930 பேர் கைது

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் நாடு முழுவதும் 65 ஆயிரத்து 930 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 18 ஆயிரத்து 614 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை...

மேல் மாகாணத்தில் இருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பிவைப்பு!

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாககொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மேல் மாகாணத்தில் இரண்டு மாதங்களாக தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமலிருந்த மேலும் 3,000 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) தமது சொந்த இடங்களுக்கு...

அம்பாறையில் முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ள மீன்பிடித் தொழில்

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச பகுதிகளில் கரைவலை மீன்பிடித் தொழிலானது முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கரையோர மீனவர்கள் தெரிவிக்கின்றனர். பெரிய நீலாவணை, மருதமுனை, கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட கடல்மட்ட வேறுபாடும்...

அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களை இன்று அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறும் நீதவான் உத்தரவு

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் எலும்புக்கூடுகள் மற்றும் புலிகளின் சீருடைகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்றுவரும் பகுதியில்...

26 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை 26 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சேவை கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்த்த ஏனைய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி...

சிறந்த தலைவன் என்ற ரீதியில் விடுதலைப்புலிகளின் தலைவர் மீது எனக்கு மரியாதை உண்டு! சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரகாரன் மீது தமக்கு மரியாதை உண்டு என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றின் நிகழ்ச்சி ஒன்றில்...

உயிரிழந்த ஹிட்லரால் வளர்க்கப்பட்ட சடோன் முதலை

ஜெர்மனி நாசிப்படையின் தலைவர் அடால்ஃப் ஹிட்லர் வளர்த்ததாக கருதப்பட்ட முதலை உயிரிழந்தது. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மன் நாசிப் படையை ரஷியாவின் ஸ்டாலின் தலைமையிலான செம்படைகள் 1945-ம் ஆண்டு தோற்கடித்தன. போரின் போது...

மெக்சிகோவில் ராட்சத விலங்குகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

மெக்சிகோவில் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத யானைகள் (மம்முத்) உள்ளிட்ட விலங்குகள் மற்றும் மனிதர்களின் எலும்புகூடுகள் கண்டெடுக்கப்பட்டன. மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் அந்த நாட்டில்...

அமெரிக்காவில் கொரோனாவால் ஒரு இலட்சத்தை நெருங்கிய உயிரிழப்பு

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்கியுள்ளது. அதன்படி அங்குமட்டும் இதுவரை 98 ஆயிரத்து 683 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனாவால் 54 இலட்சத்து 1,222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 இலட்சத்து...