செய்திகள்

இன்று நோன்புப் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்கள்

நாட்டின் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் இலங்கைவாழ் முஸ்லிம்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈதுல் பித்ர் எனப்படும் நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். இஸ்லாம் சமூக ஒற்றுமையை வலியுறுத்துகின்றமையினால் ஏழைகளின் பசியை அறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும்...

அரசதுறை அதிகாரிகள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன : மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தில் அவர்களின் அனுமதியின்றி பிடித்தம் செய்தமை தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக அரசதுறை அதிகாரிகள் குறித்து தங்களுக்கு அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன...

நாடளாவிய ரீதியில் நாளையும் தொடரும் ஊரடங்கு

நாடளாவிய ரீதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாளையும் தொடரவுள்ள நிலையில், நாளை மறுதினம் முதல் கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது. அதன் பின்னர், குறித்த...

மருதமடு குளத்தில் நீரில் மூழ்கி இளைஞர் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவன் முதலாம் வட்டாரம் கைவேலி...

குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய கடற்படை வீரர்கள்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். அதன்படி இதுவரையில் 293 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை,இலங்கையில் கொரோனா...

ஊரடங்கை மீறிய 515 பேர் கைது : பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வாகனங்கள்

ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணித்தியாலங்களில் 515 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 6 மணி முதல்...

சிவில் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்ட யானைக்குட்டி

வவுனியாவில் அநாதரவாக அலைந்து திரிந்த யானைக்குட்டி ஒன்று சிவில் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா பொகஸ்வெவ எனும் பகுதியிலே தாயின் துணையின்றி அநாதரவாக தேடியலைந்த ஆண் யானைக்குட்டியே நேற்று (சனிக்கிழமை) இரவு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த யானை நேற்றைய தினம் தன்...

இலங்கை மீன்பிடிப் படகுகளை தரைக்கு கொண்டுவரும் இலங்கை கடற்படை கப்பல்

அம்பன் சூறாவளியினால் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் இந்தோனேஷியா கடற்பரப்பிற்கு அருகாமையில் இழுத்துச்செல்லப்பட்டு கடலில் தத்தழித்துக்கொண்டிருந்த இலங்கை மீன்பிடிப் படகுகளை தரைக்கு கொண்டுவருவதில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ‘சமுதுர’ கப்பல், ஈடுபட்டுள்ளது. கடற்படையின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்ட...

35 பொலிஸ் அதிகாரிகள் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு

பொலிஸ் அதிகாரிகள் 35 பேர் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமையவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடனும் இவர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. மே மாதம் 9ஆம் திகதி முதல்...

பங்களாதேஷில் சிக்கி நாடு திரும்பிய இலங்கையர்கள்

பங்களாதேஷில் சிக்கியிருந்த 276 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். டாக்கா விமான நிலையத்திலிருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.50 அளவில் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் யூ.எல் – 1423 ரக விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு...