WiFi கனெக்‌ஷன் பயன்படுத்துபவரா? இந்த அத்தியாவசிய தகவல் உங்களுக்கு தான்

376

 

உலகமே டிஜிட்டல் மயமாகிவிட்டது என கூறினால் அது மிகையாகாது!

மளிகைப் பொருட்கள் முதல் பணத்தை அனுப்புவது வரை அனைத்தும் ஓன்லைனிலேயே செய்யப்படுகின்றன. இதற்கு தடையற்ற இணையம் தேவைப்படுகிறது, இதில் வைஃபை (WiFi) கனெக்ஷன் பங்கு அளப்பறியது.

WiFi கனெக்சனை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாப்பது எப்படி?

சாப்ட்வேர் பக்ஸ், சரியாக கான்ஃபிகர் செய்யப்படாத இன்டர்ஃபேஸ் போன்றவை உங்கள் வைஃபையை ஹேக்கர்கள் அணுக காரணமாகின்றன. எனவே உங்கள் வீட்டு நெட்வொர்க்கில் உள்ள செக்யூரிட்டி செட்டிங்ஸை அடிக்கடி தவறாமல் சரிபார்க்க வேண்டும்.

ப்ரீசெட் வைஃபை பாஸ்வேர்ட்ஸ் பாதுகாப்பற்றதாகவும், எளிதில் யூகிக்க கூடியதாகவும் இருப்பதால், ஹோம் ரவுட்டரின் செட் அப் முடிந்ததும் உடனடியாக வைஃபை பாஸ்வேர்டை மாற்றுவது நல்லது.

உங்களது பாஸ்வேர்ட் சற்று சிக்கலானது மற்றும் அவ்வளவு எளிதில் அதை கண்டறிய முடியாது என்பதை உறுதிப்படுத்தவும்.

SSID எனப்படும் புதிய நெட்வொர்க் பெயர், உங்கள் WLAN-க்கு வழங்கப்பட வேண்டும். ஏனென்றால் இந்த பெயர் உற்பத்தியாளரால் கொடுக்கப்பட்டிருப்பதாலும், யாராலும் எளிதில் தெரிந்து கொள்ளப்படலாம் என்பதாலும் நெட்வொர்க் பெயரை மாற்றுவது பாதுகாப்பான ஒன்றாக இருக்கும்.

Remote access டிஸேபிள் செய்வது உங்கள் வைஃபை-யை பாதுகாப்பாக வைப்பதற்கான மற்றொரு முக்கிய படியாகும்.

பயன்படுத்த தேவையில்லாத போது WiFi-யை ஆஃப் செய்யலாம். உங்கள் வேலை முடிந்தது நெட் தேவையில்லை என்னும் போது, இரவில் தூங்கும் போது அல்லது நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது WiFi-யை ஆஃப் செய்தால் உங்கள் டிவைஸ் இணைக்கப்படாது.

 

SHARE