அகில இலங்கை தமிழர் மகா சபையின் காரியாலயம் திறந்து வைப்பு

204

 

வவுனியா மன்னார் வீதியில் இன்று மாலை 4.30 மணியளவில் அகில இலங்கை

தமிழர் மகா சபையின் காரியாலயம் 2015 பாராளுமன்ற தேர்தலில்

போட்டியிடும் இலங்கை தமிழர் மகா சபையின் முதன்மை வேட்பாளர் இராசதுரை

செல்வராணி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

unnamed (14) unnamed (15)

காரியாலயத்தை திறந்து வைத்து உரை நிகழ்த்திய அவர் நான் ஒரு பொதுநலன்

விரும்பி பெண்கள் சமுதாயத்தை மேம்படுத்தி அவர்களின் சராசரி வரழ்வை

மிளிரச்செய்வேன், பெண்கள் சிறியோர் முதியோர் இவர்களின் வாழ்வாதாரம்

பாதுகாப்பு போன்ற விடயங்களில் கவனம் செலுத்துவேன், விதவைகள் சம்பந்தமான

அவர்களின் வாழ்வுநிலை சம்பந்தமாக தொடர்ச்சியான நடவடிக்கை மேற்கொள்வேன்,

மாற்றுத்திறனாளிகள் அனாதரவான குழந்தைகள் நலனில் அக்கறையுடன் இருப்பேன்,

இனப்பிரச்சனைக்கு நிரந்தரமான ஒரு திர்வுக்காக இயன்ற முயற்றிகளை

முன்னெடுப்பேன், சிறைகளில் வாடும் எமது உறவுகள் பற்றியும் காணாமல்

போணோர் விடயத்திலும் அதிக கவனம் செலுத்துவேன் என தெரிவித்தார்.

SHARE