அமெரிக்காவில் பெண் பயணியை டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் (Masasusets)மாநில தலைநகர் பாஸ்டனில் (Boston) உபேர் டாக்சி (Uber Taxi)ஓட்டுபவர் அலெஜான்ட்ரோ டோன்(Alengendro Doon Age-46).
டோனின் டாக்ஸியில் ஏறிய பெண் ஒருவர் கேம்பிரிட்ஜ் (Cambridge) நகருக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
அதற்கு உடனே கட்டணத்தை ரொக்கமாக கொடுக்க வேண்டும் என டோன் கேட்டுள்ளார்.
அப்போது வழியில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்று, அந்த பெண் பணத்தை எடுத்து வந்து கொடுத்துள்ளார்.
இதனையடுத்து ஆளில்லா பகுதிக்கு டாக்ஸியை ஓட்டிச் சென்ற டோன், திடீரென டாக்ஸியை நிறுத்துவிட்டு அப்பெண்ணை கற்பழித்துள்ளார்.
மேலும் அந்த பெண்ணை பலமுறை அவன் தாக்கியதுடன், அவர் சத்தம் போடாமல் இருக்க வாயை பொத்தியுள்ளார்.
இதுகுறித்து அப்பெண் கேம்பிரிஜ் பொலிசில் புகார் செய்ததையடுத்து, டோன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.