கம்பஹா மாவட்டம் பஹலகமவில் குத்திக் கொல்லப்பட்ட இளைஞர்

13

 

அரச வங்கியில் மத்திய நிலை ஊழியராக பணிபுரியும் 29 வயதான ரஷிக வினோத் என்பவர், கடத்தல் முயற்சி ஒன்றை தடுக்க முயன்றதால் கொடூரமாக கொல்லப்பட்டார். செவ்வாய்க்கிழமை (20) இரவு, கம்பஹா மாவட்டம் பஹலகமவில், தனது வீட்டு வாசலில் அபகரிப்பு முயற்சியை முறியடிக்க முயன்ற வினோத் உயிரிழந்தார்.

அவரின் மனைவியும், மனைவியின் நண்பியும் செவ்வாய்க்கிழமை (20) இரவு வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவரது மனைவி வீட்டிற்கு அருகில் வந்தபோது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ரஷிகவின் மனைவியுடைய கைப்பையை பறிக்க முயன்றனர்.

மனைவியின் வருகைக்காக காத்திருந்த வினோத்
இதன்போது, ரஷிக தனது தந்தையுடன் தனது மனைவி வீடு திரும்புவதற்காக வீட்டு வாசலில் காத்திருந்தார். மனைவியின் கைப்பையை பறித்த அடுத்து வினாடியில், ரஷிகவும் தந்தையும் மோட்டார் சைக்கிள் திருடர்களை தாக்கினர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ரஷிகவை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்த ரசிகவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும் அவரை காப்பாற்றமுடியவில்லை.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை கம்பஹா பிரதான நீதவான் மஞ்சுள கருணாரத்னவினால் புதன்கிழமை (21) பிற்பகல் இடம்பெற்றது. இதேவேளை இந்தக் குற்றத்தைச் செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், கைப்பைகளை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

SHARE