குழப்பவாதிகளுடன் வட மாகாண முதலமைச்சர் மூன்று நிமிடங்க ளில் இடத்தை விட்டு ஓடினார்

156

 

வவுனியாவிற்கு விஜயம் செய்த வட மாகாண முதலமைச்சருக்கும் வவனியா நகர வரியிறுப்பாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற ச்திப்பு திருப்தியானதாக அமையவில்லை என வரியிறுப்பாளர் சங்க பிரதிநதிகள் தெரிவிக்கின்றனர். வவுனியா நகரசபையின் வரி அறவீட்டில் பல முறைக்கெடுகள் காணப்படுகின்றமை மற்றும் நகர சபையால் மேற்கொள்ளப்பட வேண்டியப ல விடயங்கள் மக்களின் நலன்கருத்தி செயற்படுத்தப்படாமை தொடர்பாகவும் வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வரி அறவீடுகள் மீளாய்வு செய்யவேண்டும் என்ற விடயங்கள் தொடர்பாக வரியிறுப்பாளர் சங்கத்தினால் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

unnamed (19)

இந் நிலையில் முதலமைச்சரின் செயலாளர் அலுவலகத்தில் இருந்து வரி அறவீடுகளில் உள்ள முறைக்கேடுகள் தொடர்பாக மீள் பரிசீலனை செய்ய குழு நியமிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டபோதிலும் இதுவரை ஏதுவான் நடவடிக்கைகள் எடுக்கப்படாமை தொடர்பாக முதலமைச்சரை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந் நிலையில் வவுனியாவிற்கு நெற்றைய தினம் வருகை தந்த முதலமைச்சர் 30 நமிடங்கள் வரியிறுப்பாளர்களுடன் ச்திப்பதற்கு நேரம் ஒதுக்கிய போதிலும் மூன்று நிமிடங்கள் மாததிரமே சந்திப்பை மேற்கொண்டதாகவும் தெரிவித்த வரியிறுப்பாளர்கள் இச் சந்திப்பை ஒழுங்கமைத்ததில் இருந்தே சிலர் திட்டமிட்டு குழப்பியுள்ளதாகவும் இதற்கு மாகாணசபை அமைச்சரொருவர், உறுப்பினர்கள், நகரசபை செயலாளர் என்போர் காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

இதேவேளை நகரசபைக்கு குறைந்தளவு வருமானம் தற்போது வருவது தொடர்பாகவும் அதனை வரி மீளாய்வு செய்வதனூடாக அதிகரிக்க மடியும் என்ற வரியிறுப்பாளர்களின் கோரிக்கையை முதலமைச்சரம், வவுனியா மாவட்ட மக்கள் பிரதிநிதிகளும் நகரசபை அதிகாரிகளும் செவிமடுக்க தயாராக இல்லாமை வேதனையளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்

SHARE