சிம்பு தற்போதெல்லாம் எந்த விழாக்களிலும் பெரும் பாலும் கலந்துக்கொள்வது இல்லை. ஆனால், நண்பர்கள் பார்ட்டி என்றால் முதல் ஆளாக வந்து விடுவார்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகை த்ரிஷா வைத்த பார்ட்டி ஒன்றில் சிம்பு கலந்து கொண்டார், இதில் சிறப்பம்சம் என்னவென்றால் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியாவும் இந்த விருந்தில் பங்கேற்றார்.
மூவரும் ஒன்றாக இருக்கும் படி ஒரு போட்டோவை த்ரிஷா டுவிட்டரில் தட்டிவிட, தற்போது இது தான் ஹாட் டாபிக். ஏற்கனவே தன் படத்தில் நடிக்க சிம்பு, சானியாவை சில ஆண்டுகள் முன்பு அணுகியது குறிப்பிடத்தக்கது.