அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே!
சிறிலங்கா அரச பயங்கரவாதம் மேற்கொண்ட, மேற்கொள்ளும் தமிழினத்தின் மீதான இனப்படுகொலையை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை நீதி விசாரணைக்கு உட்படுத்துவதற்கு முயற்சி எடுத்துவருகிறது.
இவ்விசாரணையை மேற்கொள்ள சிறப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிறப்புக் குழு வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் சிறிலங்காவில் 2002ம் ஆண்டு தொடக்கம் 2011ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட இனங்கள் மீதான குற்றச் செயல்கள், போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் சார்ந்து விசாரிகப்படவுள்ளன.
இக்காலகட்டத்தில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் எதிர்வரும் ஐப்பசி 30ம் திகதிக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சிறப்பு விசாரணைக்குழு முன் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கலாம்.
தமிழீழ எல்லைகளைத் தாண்டி புலம் பெயர்ந்து வாழும் மக்களும் இவ்விசாரணையின் சாட்சியங்கள் ஆகலாம்.
சாட்சியங்களை தயார்படுத்தும் பணியை மக்களுக்கு இலகுபடுத்தும் நோக்கத்துடன் அக்கினிப் பறவைகள் – புதிய தலைமுறை அமைப்பினர் சுவிட்சர்லாந்தில் மாநில ரீதியாக சாட்சியமளிக்கும் இடங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நீங்கள் வழங்கும் சாட்சியங்கள் அனைத்தும் உரியமுறையில் எம்மால் சேகரிக்கபட்டு ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்படும்.
பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் ஒரு வரலாற்றுப் பணியாகும், எமது இனத்தின் படுகொலைக்கு நாம் ஒவ்வொருவரும் நீதி கேட்கும் கடமையுமாகும்.
உங்கள் கடமையைத் தவறாது செய்து எமது இனத்திற்கு விடிவு கிடைக்க உங்களால் செய்யகூடிய ஒரு காரியமாகும் என்பதை மறவாது, தவறாது உங்கள் கடமையைச் செய்யுங்கள் என கேட்டுக் கொள்கின்றோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.
சாட்சிகள் பதியும் இடம் திகதி போன்ற விபரங்கள், மாநில ரீதியாக கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது..
1.Zürich
079 193 86 89 (Kuru)
Sans – Papiers Anlaufstelle Zürich
Klakbreiterstrasse. 8
8003 Zürich
திகதி: செப்டெம்பர் 27, 28
நேரம்: காலை 09.00 மணி தொடக்கம் மாலை 17.00 மணி வரை
2.Bern
079 231 19 04 / 079 947 52 04 (Aexsh / Jathuram )
Geschäftsstelle der GfbV Schweiz
Schermenweg 154
3072 Ostermundigen
திகதி: செப்டெம்பர் 20, 21
நேரம்: காலை 09.00 மணி தொடக்கம் மாலை 17.00 மணி வரை
பிராந்திய ரீதியான தொடர்பாளர்களின் விபரம்
1.Basel, Thun
079 260 44 95 (Nirushanan)
2. Luzern
079 193 86 89 (Kuru)
3.Solothurn
079 550 80 59 (Sukan)
4.Chur
079 720 09 84 (Roshanth)
5.Genf
079 947 52 04 / 079 550 80 59
(Jathuram, Sukan)
சுவிசில் அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டும் விழிப்பூட்டல் கூட்டம்
சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச் சபையினால் முன்னெடுக்கப்படும் அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டும் செயற்திட்டம் தொடர்பிலான விழிப்பூட்டல் பொதுக்கூட்டமொன்று சுவிசில் இடம்பெறுகின்றது.
சிங்கள அரசினது தமிழன அழிப்பு தொடர்பில் சாட்சியங்கள் ஆதாரங்களை சமர்பிப்பது தொடர்பில் இடம்பெறவுள்ள இந்த பொதுக்கூட்டமானது, சூரிச் நகரில் இடம்பெறவுள்ளது.
ஒக்ரோபர் 30ம் திகதிக்கு முன்னராக சாட்சியங்களை வழங்க வேண்டுமென ஐ.நாவின் விசாரணைக்குழு அறிவித்துள்ள நிலையில், இதற்கான செயற்பாட்டினை தீவிரப்படுத்தும் நோக்கில் இக்கூட்டம ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
செப்ரெம்பர் 13ம் நாள் சனிக்கிழமை (13-09-2014) Learn Lab, Heidwiesen 27, 8051 Zurich எனும் இடத்தில் 16மணிக்கு இக்கூட்டம் இடம்பெறுகின்றது.
விழிப்பூட்டல், இனங்காணுதல், பதிவிடல், ஆவணப்படுத்துதல் எனும் அடிப்படையில் இதற்கான செயல்முனைப்புகள் அமைகின்றன.
பொதுமக்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து விழிப்புடன் உரியமுறையில் சாட்சியங்களை ஆதாரங்களை வழங்குவது தொடர்பில் இக்கூட்டத்தில் விளக்கமளிக்கப்படவுள்ளது.
தமிழின அழிப்பில் ஈடுபட்டவர்களை பொறுப்புக் கூற வைப்பதோடு, தமிழர்களுக்கான பரிகார நீதியினை அனைத்துலக சட்ட வழிமுறைகள் ஊடாக நாம் கோருவதற்கு எட்டியுள்ள இந்த வாய்ப்பினை நாம் அனைவரும் விரைந்துணர்ந்து செயற்பட வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.