வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியேரின் புகைப்படங்களை பிரசுரித்து ஜனாதிபதிக்கு ஆதரவான தேர்தல் பிரசாரங்கள் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணம்- திருகோணமலை பகுதியில் வீரபுரம் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதிக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மைத்திரி ஆட்சிக்கு வந்தால் வடக்கிலுள்ள விகாரைகளை உடைப்பேன் என சிவாஜிலிங்கம் கூறியதாகவும்,
மைத்திரி ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதி மஹிந்தவை மின்சாரக் கதிரையில் ஏற்றுவேன் என திருமதி அனந்தி சசிதரன் கூறியதாகவும் அவர்களுடைய புகைப்படங்களை பிரசுரித்து அதில் சிங்கள மொழியில் குறித்த வாசகங்களை எழுதியே, பிரச்சாரத்திற்கான பிரசுரங்கள் உருவாக்ப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது தாங்கள் அவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களை வெளிப்படையாக எங்கும் பேசியதில்லை. என தெரிவித்ததுடன். ஜனாதிபதி இனவாதத்தை தூண்டிவிட்டு மீண்டும் தனது காட்டாட்சியை நிலைத்திருக்கச் செய்வதற்கு முயற்சிக்கின்றார் என தெரிவித்தனர்.