ஜப்பானில் 8.5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்

390
பசிபிக் கடல்பகுதியில் நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் ஆபத்தான நிலப்பரப்பில் அமைந்திருக்கும் ஜப்பான் நாட்டில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இருந்து தெற்கே சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள போனின் தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. போனின் தீவில் இருந்து சுமார் 194 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம், பொருள் சேதம் தொடர்பாக உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

ஓகாஸ்வரா தீவுகள் என்றழைக்கப்படும் இந்த போனின் தீவில் 30-க்கும் மேற்பட்ட தீவுக்கூட்டங்கள் அடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

SHARE